தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா..?

வாழைப்பழத்தை  குழைந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக செயல்பட்டு, தேர்வு எழுத பெரிதும் உதவியாக இருக்கும்.

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் வாழைப்பழம் , இந்த பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து உள்ளது, மேலும் இத சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது, இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நன்மைகள்:

வாழைப்பழத்தில் சுவையான மற்றும் மென்மையான செரிமான பாதையில் எளிதில் நகர்ந்து செல்லக்கூடியது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின் போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி, சோர்வில் இருந்து விடுவிக்கும்.

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைந்து கட்டுக்கோப்பாக இருக்கலாம், மேலும் இது வயிற்றை நிரப்புவதோடு, எளிதில் செரிமானமாகும். வாழைப்பழம் சாப்பிட்டால் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, இதில் உள்ள கார்போஹைட்ரேட் ஆற்றலாக மாற்றப்பட்டு, வயிற்றை நிரப்பும். மேலும் காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்பு, சுடுநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

வாழைப்பழத்தை குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக செயல்பட்டு, தேர்வு எழுத பெரிதும் உதவியாக இருக்கும். இந்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் ஏராளமான அளவில் இருக்கும். மேலும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.