9 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷூடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.!

தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும்,

By ragi | Published: Aug 02, 2020 01:16 PM

தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும், குட்டி பட இயக்குநரான மித்ரன் ஆர். ஜவஹர் இயக்குவதாகவும், ஹன்சிகா மோத்வானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். அதனையடுத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் 'D43', சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'D44', செல்வராகவன் இயக்கத்தில் 'புதுப்பேட்டை 2' , வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் , ராட்சஷன் பட இயக்குநரான ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி தயாரிக்கும் ஒரு படம் மற்றும் இந்தியில் 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் இவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனுஷின் உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி மற்றும் குட்டி ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஜோடி 2011ல் வெளியான மாப்பிள்ளை படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc