7,20,00,00,000 அமெரிக்க டாலரை இழந்த பேஸ்புக் நிறுவனம்..!

இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் செயலி, பேஸ்புக்.

By surya | Published: Jun 27, 2020 02:20 PM

இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் செயலி, பேஸ்புக். உலகளவில் 2.6 பில்லியன் பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.  அதுமட்டுமின்றி, இந்த ஊரடங்கில் அனைவரும் சமூகவலைத்தளங்கள் பயன்படுத்தி வருவதால், புதிய அம்சங்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டது.

அதில் குறிப்பாக, 50 பேர் வரை வீடியோ காலில் பேசும் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன்காரணமாக, பேஸ்புக்கின் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் பணக்கார பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு வந்தார்.

வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் இன்க் என்ற நிறுவனம், சமூக ஊடக விளம்பரங்களை நிறுத்திவிட்டன, அதற்கு காரணம், விமர்சகர்கள் பேஸ்புக் போதிய பேஸ்புக்கில் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறான தகவல்களை வழங்கிவருவதாக கூறினார்கள். அதனை தொடர்ந்து, அனைத்து சமூக ஊடக தளங்களிலும் குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு அனைத்து கட்டண விளம்பரங்களையும் இடைநிறுத்தும் செய்யயுள்ளதாக கோகோ கோலா கூறியது.

இதன்காரணமாக, கடந்த சில நாட்களாக பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பரங்கள் குறைந்து வரும் நிலையில், பேஸ்புக் நிறுவனத்திற்கு 7.2 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டமடைந்தாக பேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.

அதுமட்டுமின்றி, கறுப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கு பல தரிப்பினார் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், அதனை அரசியல் அறிவிப்பாக பார்க்கப்பட்டதாகவும், அதனால்தான் அதனை நீக்கவில்லை என பேஸ்புக் விளக்கமளித்துள்ளது. மேலும், அந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc