தடையால் வீட்டில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு இனிப்பான செய்தி…ஸ்டிரீமிங்க் தரத்தை குறைத்த நிறுவனங்கள்…

கோரோனா வைரஸ்  நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதில், தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்பதை வலியுறுத்தும் விதமாக பிரதமர் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். பிரதமர் இது குறித்து, ”உங்களைக் கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். 21 நாட்கள் தயவுசெய்து வெளியில் வராதீர்கள். நண்பர்கள், உறவினர்களை வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இந்திய மக்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இவர்கள் பொழுதை போக்குவதற்க்கு தொலைக்காட்சி, இணையம், சமூக வலைதளம் என அனைத்தையும் பயன்படுத்தி பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவும் விதமாக பேஸ்புக், யூடியூப், நெட்பிலிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது வீடியோக்களின் ஸ்டிரீமிங்க் தரத்தை குறைப்பதாக  அறிவித்துள்ளன. இதன்மூலம் இணைய தளத்தை பயன்படுத்தும் இணையவாசிகளின் செலவைக் குறைக்க முடியும். இந்த அறிவிப்பு 144 உத்தரவு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

author avatar
Kaliraj