நியுஸிலாந்து துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை உயர்வு!!

  • நியூசிலாந்து தலைநகர் கிறிஸ்ட்சர்ச்சில் இந்திய நேரப்படி இன்று காலை அங்கு உள்ள ஒரு மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது
  • ஒரே ஒருவன் தன் கையில் நவீன ரக துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு வந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தினான்

நியூசிலாந்து தலைநகர் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் என்ற மசூதிக்குள் பயங்கரவாதி ஒருவன் காரில் நவீன ரக துப்பாக்கியுடன் வந்தான். தனது கையில் இரண்டு துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு மசூதிக்குள் சென்ற அவன் அங்கு தொழுதுகொண்டிருந்தவர்கள் அனைவரையும் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொலை செய்தான். காலை நிலவரப்படி 7 பேர் இறந்ததாக தகவல் வந்த நிலையில் தற்போது வரை 52 பேர் இறந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.