பேஸ்புக் கூட்டத்தில் பேசிய ஆடியோ கசிந்தன.. அதிர்ந்து போன ஜூக்கர்பெர்க்..!

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் அப்ளிகேஷன், பேஸ்புக்.

By surya | Published: Oct 02, 2019 08:24 PM

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் அப்ளிகேஷன், பேஸ்புக். இந்த நிறுவனத்தின் மேலாளராக மார்க் ஜூக்கர்பெர்க், அலுவலக கூட்டங்களில் பேசிய ஆடியோ கசிந்தது. பேஸ்புக் நிறுவனம் ஊழியர்களுடனான 2 கூட்டங்கள், ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் பேஸ்புக்கை மேம்படுத்துவது குறித்து ஜூக்கர்பெர்க் பேசியுள்ளார். அதில் பேஸ்புக் நிறுவனத்தை தகர்க்க முயலும் அமெரிக்க அரசியல்வாதிகளின் முயற்சி முதல், டிக்டாக் செயலியுடனான போட்டி வரை ஜூக்கர்பெர்க் பேசிய முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளிவந்துள்ளது. இது அந்நிறுவனத்திடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Image result for mark zuckerberg அந்த ஆடியோவில் அவர், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் தடம் பதிக்கும் வகையில், பேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா என்ற செயலியை மேம்படுத்த உள்ளதாக கூறினார். மேலும் ஊழியர்கள், பொருளாதார கடமைகள் குறித்து கேள்விகள் எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த அவர், 2006ம் ஆண்டில் யாகூ நிறுவனம் சந்தித்தது போன்ற நெருக்கடிகளை பேஸ்புக் நிறுவனம் கடந்து வந்த தருணங்களை ஜூக்கர்பெர்க் சுட்டிக்காட்டி நினைவுகூர்ந்தார்.
Step2: Place in ads Display sections

unicc