இதய நோய்களை குணப்படுத்தி இதயத்திற்கு பலம் சேர்க்கும் முக்கிய உணவுகள் என்னென்ன என்பதை பற்றி நீங்கள் அறிவீரா ?

இன்றைய காலகட்டத்தில் நாம் பெரிதும் பாதிக்க படக்கூடிய நோய்களில் இதய நோயும் ஒன்று.அந்த நோயிற்காக நாம் பல வகையான மருந்துகளை உட்கொண்டாலும் அதற்கு நிரந்தர தீர்வு இன்னும் நமக்கு கிடைக்க வில்லை.

இந்த பதிப்பில் இதய நோய்களை குணப்படுத்தி இதயத்திற்கு பலம் சேர்க்க கூடிய உணவுவகைகளை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

பாதாம்:  

பாதாமில்  வைட்டமின் ஈ சத்து நிறைந்து காணப்படுவதால் அது இதய நோயை குணப்படுத்துகிறது. பாதாமை நாம் தினமும் உணவில் எடுத்து வந்தால் அது  50% இதய நோயை குணப்படுத்தும் என்று ஒரு ஆய்வில் கண்டறியபட்டுள்ளது.

உலர்திராட்சை:

உலர்திராட்சையில் இருக்கும்  ஆண்டி -ஆக்ஸிடண்டுகள், பொட்டாசியம்  போன்ற சத்துக்கள் இதயத்தில் இருக்கும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

சோயா  மொச்சை :

சோயா மச்சை நமது உட லில் பாதாமில் கொழுப்புகள் சேர விடாமல் தடுக்கிறது. மேலும் இது ரத்த ஓட்டத்தையும் சீராக்க உதவி புரிகிறது.

புளு பெர்ரி:

புளு பெர்ரியில் இருக்கும் ஆண்டி -ஆக்ஸிடண்டுகள் இரத்த குழாய் அடைப்புகள் சம்பந்தமான நோய்களை நோய்கள் நம்மை நெருங்காமல் தடுக்கிறது.எனவே இந்த பழங்களை நாம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

க்ரீன் டீ :

க்ரீன் டீயை நாம் தினமும் குடிப்பதால் அதில் இருக்கும் ஆண்டி -ஆக்ஸிடண்டுகள் நமது உடலில் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்தம் வரைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணையை நாம் தினமும் சமையலில் சேர்த்து வந்தால் அது நமது உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது. மேலும் அது இதயத்திற்கும் பாதுகாப்பளிக்கிறது.

காய்கறிகள் :

அன்றாடம் நாம் நமது உணவில் காய்கறிகளை சேர்த்து வருவதால் நாம் பலவிதமான நோய்தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். மேலும் இதய நோய் இருப்பவர்கள் அன்றாட உணவில் காலிபிளவர், ப்ரோக்கோலி முதலிய காய்கறிகளை சேர்த்து வருவது மிகவும் நல்லது.

பழங்கள் :

ஆப்பிள்,ஆரஞ்சு ,திராட்சை முதலிய உணவுகளை நாம் உணவில் சேர்த்து வருவதால் அதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.