‘கனிமொழிக்கு வாக்களியுங்கள்’ தூத்துக்குடியில் வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்!!

  • விளாத்திகுளம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பன் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்

நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் சின்னப்பன் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு சிரிப்பை ஏற்படுத்தினார்.

இதனால் அந்த கூட்டமே சிரிப்பலையில் அதிர்ந்தது பின்னர் தவறுதலாக. பேசிய சின்னப்பன் உடனடியாக சுதாரித்து அதிமுக பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டார்.

author avatar
Srimahath

Leave a Comment