வாடகை ராக்கெட்டில் வெற்றிகரமாக விண்ணிற்கு சென்ற இரு நாசா வீரர்கள்.!

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று பிற்பகல் 3. 22 (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.52 மணிக்கு) மணிக்கு அனைத்து தடைகளையும் கடந்து, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

தனியார் விண்கல நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் வரும் மே 27 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று நாசா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததுள்ளது‌.

ஆனால் மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக அந்த திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. மேலும், அந்த ராக்கெட் வரும் மே 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

Image

இதுகுறித்து தெரிவித்துள்ள நாசா, ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன்9 ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம். இதற்காக வானிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தோம். இன்று ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலும், நாளை ராக்கெட்டை ஏவுவதற்கான இரண்டாவது திட்டமும் வைத்திருந்தாக தெரிவித்தனர்.

ஆனால் அந்த தடைகள் அனைத்தயும் தாண்டி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று பிற்பகல் 3. 22 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.52 மணிக்கு )அனைத்து தடைகளையும் கடந்து, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதனால் ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனதின் தலைவர் எலன் மஸ்க்கின் கனவு நிறைவேறியது. மேலும் நாசா ஊழியர்களும் ராக்கெட் பாய்ந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி நிறுவனத்திற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கொண்டு சென்றது. இதனால் விண்ணில் சென்ற அனுபவம் அந்நிறுவனத்திற்கு உள்ளது. அரசு அமைப்புகளைவிட நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. மேலும், மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க்கின் கனவுத்திட்டமாக இருந்தது. இது நிறைவேறியதால், பொதுமக்கள் முதல் அதிபர் வர அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.