மீண்டும் உயர்ந்த தக்காளி விலை.! வியாபாரிகள் வேதனை..

தமிழகத்தில் உயர்ந்துள்ள தக்காளி விலை பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2 தினங்களாக குறைந்த தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆம்… சென்னை, மதுரை, குமரி, சிவகங்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வந்த தக்காளி விலை மீண்டும் பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.

அதேபோல், பச்சை மிளகாய், கத்திரிக்காய், முள்ளங்கி, பீன்ஸ், சின்ன வெங்காயம் என அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் முதல் வாடிக்கையாளர்கள் வரை வேதனை அடைந்துள்ளனர். வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்வது குறிப்பிடத்தக்கது.

சென்னை கோயம்பேடு:

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை விலை தக்காளி கிலோவிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.70-ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை ஆகிறது. இதற்கு காரணம் வழக்கமாக 1,100 டன் தக்காளி வரும் நிலையில் 400 டன் மட்டுமே வந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் காய்கறிகளை விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.