மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், முதல்வர் யாரிடம் கேட்க மாவட்டங்களுக்கு போகிறார்? – ஸ்டாலின்

மக்களின் பாதிப்புகளை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், முதலமைச்சர் யாரிடம் கேட்க மாவட்டங்களுக்கு போகிறார்? – ஸ்டாலின்

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூவத்தூரில் லாட்டரி அடித்தது போல முதல்வரான திரு.பழனிசாமி அவர்களுக்கு மக்களின் அருமை விளங்கவில்லை. அரசு விழா & ஆய்வுக்கூட்டங்களுக்கு திமுக MP & MLA -களை அழைத்து, மக்களின் குறைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் அரசு விழாக்களிலும், ஆய்வுக்கூட்டங்களிலும், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணித்து வரும் அ.தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தர்மபுரியில் நடைபெற்ற கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தில், கழகத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் அவர்களை அனுமதிக்க மறுத்ததோடு மட்டுமின்றி, நான் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் எம்.பி.,யை எப்படி அனுமதிக்க முடியும் என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பது, ஜனநாயக விரோதம் மட்டுமல்லாமல், பண்பாடற்ற செயல், அநாகரிகத்தின் உச்சம் என்றுதான் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மேலும், அரசு ஆய்வு கூட்டங்களுக்கு திமுக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும் என்றும் மக்களின் குறைகளை எடுத்துரைத்து தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.