ஹேமந்த் சோரன் கைது எதிரொலி… நாடாளுமன்றம் தொடங்கியதும் அமளி.! எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு.!

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நேற்று முந்தினம்  குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று முன்தினம் குடியரசு தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அதனுடன் நேற்றைய கூட்டத்தொடர் நிறைவுபெற்றது.

பரபரக்கும் ஜார்கண்ட் அரசியல் களம்.! ஆளும்கட்சி எம்எல்ஏக்களுக்கான தனி விமானம் ரத்து.!

இன்று 3ஆம் நாளாக வழக்கமான நிகழ்வுகளான உறுப்பினர்களின் கேள்வி, பட்ஜெட் மீதான விவாதம் உள்ளிட்டவைகளுக்காக நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெற உள்ளதால், தற்போது ஆளும் பாஜக அரசின் கீழ் கூட்டப்படும் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.

இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே, எதிர்கட்சி உறுப்பினர்கள், காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மல்லிகார்ர்ஜுனா  கார்கே அறையில் ஆலோசனை மேற்கொண்டனர். இன்றைய கூட்டத்தில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் கைது நடவடிக்கை பற்றி விவாதம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.

இதனை அடுத்து இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கியது. தொடங்கியதும் முதல் தீர்மானமாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இருந்தே, ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது குறித்து அமளியில் ஈடுபட்டனர்.

சோரன் கைது நடவடிக்கை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.  அமலாக்கத்துறையை கொண்டு எதிர்கட்சி உறுப்பினர்களை ஆளும் கட்சியினர் பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

1 thought on “ஹேமந்த் சோரன் கைது எதிரொலி… நாடாளுமன்றம் தொடங்கியதும் அமளி.! எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு.!”

Leave a Comment