பிரமாண்டமாக உருவாகி வரும் RRR படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.!

ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தினை அடுத்த வருடம் ஜூலையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350  கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. மேலும்  இந்த படத்தின் லோகோ மற்றும் மோஷன் போஸ்ட்ர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.மேலும், சமீபத்தில் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வரவேற்பைப் பெற்றது.

2021ல் ஜனவரி 8ம் தேதி  வெளியிட திட்டமிட்டிருந்த இந்த படம், தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்றுள்ளது. தற்போது இந்த படத்தை 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அறிந்த ரசிகர்கள் பலர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Recent Posts

ஒரே மைதானத்தில் இந்திய அணியின் போட்டிகள் ? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போடும் புதிய திட்டம் !!

Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…

10 mins ago

கோலிவுட் இஸ் பேக்! அரண்மனை 4 படத்துக்கு குவியும் மிரட்டல் விமர்சனங்கள்!

Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…

23 mins ago

அம்மா சோனியா காந்தி கோட்டையில் மகன் ராகுல் காந்தி போட்டி.! பிரியங்காவுக்கு ‘நோ’.!

Election2024 : மக்களவை தேர்தலில் உ.பி மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த…

32 mins ago

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

4 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

5 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

11 hours ago