Vande Bharat train

வந்தே பாரத் ரயில் நிறம் திடீர் மாற்றம்! வெள்ளைக்கு பதிலாக ஆரஞ்சு! காரணம் என்ன?

By

முதலில் வந்தே பாரத் ரயிலின் வெளிப்புறத் தோற்றத்திற்கு நீலமும்-வெள்ளையும் கலந்த இருந்து நிலையில், இப்போது புதிய நிறமாக ஆரஞ்சு சேர்த்துள்ளது ரயில்வே நிர்வாகம். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்த விளக்கம் கேட்கையில், வெள்ளை நிறத்தால் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகள் அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. நேற்று, சென்னை ICFல் உள்ள ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

புதிய ஆரஞ்சு நிற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தற்போது சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இங்குள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் மேம்பாடுகளை ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பிறகு, ரயில்வே அமைச்சர் செய்தியாளர் சந்தித்து பேசினார், அப்போது அவரிடம் காவி நிறம் ஏன் என்று கேட்டபோது, இது மேக் இன் இந்தியா என்ற கருத்தாக்கமாகும், ‘தேசியக் கொடியில் காவி நிறம் உள்ளதால் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த நிறத்தை தேர்வு செய்தோம்’ என்றார்.

இது இந்தியாவில் எங்கள் சொந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பொது, வந்தே பாரத் ரயில்களில் 25 முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார். சோதனை ஓட்டமாக 28வது ரேக்கின் நிறம் மாற்றப்படுகிறது என்றார்.

Dinasuvadu Media @2023