ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் நீக்கி திரிணாமுல் காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை..!

Sheikh Shajahan : மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காலியில்  திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,  நிலம் அபகரிக்கப்பட்டதாக  அவர் மீது குற்றசாட்டு எழுந்தது. இதனால் ஷாஜகானுக்கு எதிராக பல பெண்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரிதாக பேசப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகான் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். ஆனால் ஆளும் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஷேக் ஷாஜகானை பாதுகாத்து வருவதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டி வந்தது. பாஜக குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்தது.

READ MORE- நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கு.. கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகான்..!

தலைமைறைவாக இருந்து வந்த ஷேக் ஷாஜகானை நேற்று நள்ளிரவு வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் போலீசாரின் சிறப்பு குழு கைது செய்தனர்.  ரேஷன் ஊழல் வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த சென்றபோது அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது  தாக்குதல் நடத்தினர்.

READ MORE-  உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அப்போது தலைமறைவான ஷாஜகான் 55 நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்க காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஷாஜகானை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி  திரிணாமுல் அறிவித்தது.  கட்சியின் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டெரெக் ஓ பிரையன் பேசுகையில், ” ஷாஜகான் ஷேக்கை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ஷாஜகான் ஷேக்கை பாசிர்ஹாட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 10 நாட்கள் சிஐடி போலீஸ் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமலாக்கத்துறை அவரை கைது செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment