காங்கிரஸ் அழைப்பை நிராகரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்..!

அனைத்து எதிர்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்பை திரிணாமுல் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே நாளை பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி நாளை காங்கிரஸ் ஆலோசனை நடத்துகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்க வாய்ப்பில்லை பல மாநிலங்களில் கட்சி பிளவுகள் மற்றும் உட்கட்சிப் பூசல்களுடன் போராடி வரும் காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை வழிநடத்தி ஒருங்கிணைக்கும் நிலையில் இல்லை.

காங்கிரஸ் கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். காங்கிரஸ் தலைவர்கள் முதலில் அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தட்டும். பிறகு மற்றவர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்யுங்கள். பாஜவை எதிர்ப்பதில் காங்கிரஸ் தலைவர்களுக்கு போதுமான உறுதி இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மழைக்கால கூட்டத் தொடரில் பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய  அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து கடும் நெருக்கடி கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

இந்த வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்.. டூ பிளெசிஸ் பெரும் மூச்சு!

IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…

2 mins ago

‘ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையாது’ – டேனியல் வெட்டோரி

Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…

31 mins ago

தேர்தல் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி.! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…

33 mins ago

இப்படி செய்தால் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவோம்… எச்சரிக்கும் வாட்ஸ்அப்.!

WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…

53 mins ago

கேரளாவில் மும்முனை போட்டி… களத்தில் 194 வேட்பாளர்கள்.. வாக்குபதிவின் தற்போதைய நிலவரம்!

Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…

1 hour ago

ஜனநாயக கடமையை ஆற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.!

Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

1 hour ago