job

சேவை மனப்பான்மை உள்ளவரா நீங்கள்.? இந்த வேலை அழைப்பு உங்களுக்கு தான்.!

By

திருச்சி : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இயங்கி வரும் லால்குடி, மணப்பாறை, துறையூர் முசிறி, ஸ்ரீரங்கம், தொட்டியம் ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை எடுத்துக்கூற மொத்தம் 50 பேர் “சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers)” வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் எண்ணிக்கை 

  • “சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers)” பணிக்கு மொத்தமாக 50 காலியிடங்கள் மட்டுமே உள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? 

ஆசிரியர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட)
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்
MSW பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்
அங்கன்வாடி பணியாளர்கள் / மருத்துவர்கள்
சட்டக்கல்லூரி மாணவர்கள் (வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் வரை)
சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர்கள்
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமூக தொண்டு புரியும் மகளிர் குழுக்கள்
திருநங்கைகள்
அடிப்படை கல்வி தகுதி (கணினி அறிவு)
சட்டப்பணிகள் குழுவில் பணிபுரிகின்ற தன்னார்வ சட்டப்பணியாளர்கள் பணிக்கு பொருத்தமாக கருதும் நபர்

சம்பள விவரம் 

மேற்படி பணிக்கு மதிப்பூதியம் தவிர சம்பளம், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஏதும் கிடையாது. மேற்படி பணியில் இணையும் நபர்களது பணியினை தன்னார்வலர்களாக மட்டுமே கருதப்படும். நிரந்த பணியென கருத இயலாது. மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (அ) வட்ட சட்டப்பணிகள் குழுக்களை அணுகலாம் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நாட்கள் 

இந்த வேலையில் சேர ஆர்வம் இருப்பவர்கள் வரும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்துகொள்ளலாம். ஜூலை 10- தான் கடைசி தேதி.

விண்ணப்பம் செய்யும் முறை

இந்த வேலையில் சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://tiruchirappalli.dcourts.gov.in/ என்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக படித்துக்கொண்டு தேவையான ஆவணங்களை வைத்து நிரப்பி கொள்ளவேண்டும்.

நிரப்பிய அந்த படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் 10.07.2024-ம் தேதி மாலை 05.00 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி 

தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், திருச்சிராப்பள்ளி.

முக்கிய ஆவணங்கள் 

  • பிறப்பு சான்றிதழ்: S.S.L.C/H.S.C சான்றிதழ்
  •  ஜாதி சான்றிதழ்
  • S.S.L.C/H.S.C/Degree/Diploma தேர்ச்சி பெற்ற சான்றிதழ்
  • குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்

மேலும், இந்த பணி சட்ட தன்னார்வர்களுக்கான கடமை மற்றும் சேவை மட்டுமே. இது நிரந்தர பணிக்கானது அல்ல, முற்றிலும் தற்காலிகமானது மற்றும் அதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை, சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வேலையை பற்றி மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள PDF-ஐ க்ளிக் செய்து பாருங்கள்.

 

Dinasuvadu Media @2023