TOKYO2020:ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற இந்திய ஹாக்கி அணி..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகின்றன.மேலும்,ஹாக்கி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் ‘ஏ பிரிவில்’ இடம் பெற்றுள்ளன.

இந்தியா vs நியூசிலாந்து:

அதன்படி,நேற்று காலை நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. போட்டி தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே நியூசிலாந்து தனது முதல் கோலை அடித்து இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இதனையடுத்து,10-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் இந்திய அணி சார்பாக முதல் கோல் அடித்து,1-1 என கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார்.இதனைத் தொடர்ந்து,கேப்டன் மன்பிரீத் சிங் 26 மற்றும் 33 வது நிமிடங்களில் தொடர்ச்சியான பெனால்டி கார்னர்களை அடித்தார்.

இதற்கிடையில்,நியூசிலாந்து 27-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இதனால் 3-வது காலிறுதி ஆட்டம் முடிவில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.4-வது காலிறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தினால் இந்தியா 3-2 என கணக்கில் வெற்றி பெற்றது. இதனால்,டோக்கியோவில் இந்த முறை இந்தியர்கள் ஒரு பிரகாசமான பதக்கத்தை வெல்வார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது.

இந்தியா vs ஆஸ்திரேலியா :

இந்நிலையில்,இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாம் நாள் லீக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி களமிறங்கியது.முதல் ரவுண்டில் டேனியல் பீல் அடித்ததால் ஆஸ்திரேலியா முன்னிலை பெற முடிந்தது.ஆனால்,கேப்டன் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கோல் ஏதும் அடிக்கவில்லை.இதனால், எனவே  ஆஸ்திரேலியா 1-0 என கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து, இந்தியா சார்பில்  தில்பிரீத் சிங் ஒரு கோல் மட்டுமே  அடித்தார்.ஆனால்,டிம் பிராண்ட், ஜோசுவா பெல்ட்ஸ், ஃப்ளின் ஆண்ட்ரூ ஓகில்வி, ஜெர்மி தாமஸ் ஹேவர்ட் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு தலா ஒரு கோல் அடித்தனர்.இதனால்,1-7 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய ஹாக்கி அணி வெற்றி பெற்றது.

Recent Posts

ஜனநாயக கடமையை ஆற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.!

Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

22 mins ago

கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…

58 mins ago

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

1 hour ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

2 hours ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

3 hours ago