வன்முறையில் ஈடுபட்டவர்கள் , பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் – மோடி.!

  • லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயின் பிறந்த நாளான நேற்று அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
  • பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தாங்கள் செய்தது சரிதானா.. என சிந்தித்து பார்க்க வேண்டும்” என கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லோக்பவனில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 25 அடி உயர வெண்கல சிலை வைக்கப்பட்டது. வாஜ்பாயின் பிறந்த நாளான நேற்று  அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் , மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் லக்னோவில் நிறுவயுள்ள வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு  மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய மோடி , “ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விவகாரங்கள் அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரமான சாலைகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை நமது உரிமையாகும். அவற்றை பாதுகாப்பது நமது கடமையாகும்.

தரமான கல்வி பெறுவது நமது உரிமையாகும். அந்த கல்வி நிறுவனங்களை பாதுகாப்பது, ஆசிரியர்களை மதிப்பது நமது கடமையாகும்.பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தாங்கள் செய்தது சரிதானா.. என சிந்தித்து பார்க்க வேண்டும்” என கூறினார்.

Recent Posts

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…

9 hours ago

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

10 hours ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

11 hours ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

11 hours ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

11 hours ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

11 hours ago