திரையரங்குகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.
தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அந்த வகையில் ,அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.அதன்படி நாடு முழுவதும் பல இடங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.ஆனால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆகவே திரையரங்குகளை திறக்க வலியுறுத்தி முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.இந்நிலையில் வருகின்ற 28 ஆம் தேதி திரையரங்கு திறப்பதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி .
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…