நாளை முதல்…இவை கட்டாயம்;மீறினால் ரூ.500 அபராதம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை:நாளை முதல் (ஜன.10 ஆம் தேதி) புறநகர் மின் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா கட்டுப்பாடுகளின்படி,புறநகர் ரயில் சேவைகள் 50% இருக்கை வசதியுடன் இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில்,நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டும்,மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு,சென்னை புறநகர் மின் ரயில்களில் பயணிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி,நாளை முதல் புறநகர் மின் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

  • மேலும்,பயணிகள் ரயில் நிலையத்திலும் ரயிலிலும் செல்லும்போதும், ​​சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்,முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளைக் கழுவுதல் போன்ற அனைத்து கொரோனா தடுப்பு நடத்தைகளையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • மாறாக,ரயில் நிலையத்தில் அல்லது பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
  • இந்த புதிய கட்டுப்பாடுகள் 31-01-2022 அன்று வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே,பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் எனவும்,இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் புறநகர் மின்ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும்,UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி நாளை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் மற்றும் பயணத்தின் போது உங்களின் முறையான ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கு ரயில்வே ஊழியர்களுடன் பயணிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

29 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

33 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

51 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

54 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

54 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago