எம்.ஜி.ஆரின் ஹிட் படத்திற்கு நோ சொன்ன சரோஜாதேவி! காரணம் என்ன தெரியுமா?

Saroja Devi : எம்ஜிஆரின் ஹிட் படம் ஒன்றில் நடிக்க சரோஜாதேவி மறுப்பு தெரிவித்த காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் அவருடன் அதிகமான படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவர் சரோஜாதேவி. அந்த வகையில் எம்.ஜி.ஆருடன் எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், நாடோடி மன்னன், படகோட்டி, நான் ஆணையிட்டால், பாசம், ஆசை முகம் இன்னும் சில படங்களும் நடித்து இருக்கிறார்.

அந்த சமயம் இவர்களுடைய ஜோடி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த காரணத்தால் எம்.ஜி ஆர் வைத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களே படத்தில் சரோஜாதேவியை புக் செய்துவிடுவார்களாம். இதன் காரணமாகத்தான் தொடர்ச்சியாக எம் ஜி ஆர் படங்களில் சரோஜா தேவியும் நடித்துக் கொண்டிருந்தாராம்.

தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் எல்லாம் சரோஜாதேவியை  போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கூறியதாகவும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், எம்ஜிஆர் உடைய மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றான வேட்டைக்காரன் படத்தில் சரோஜாதேவி நடிக்காதது அந்த சமயமே ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது . எந்த காரணத்துக்காக வேட்டைக்காரன் படத்தில் சரோஜாதேவி நடிக்கவில்லை என்ற காரணம் இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சரோஜாதேவி இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய சரோஜாதேவி ” அந்த படத்தில் நடிக்க முதலில் எனக்கு தான் வாய்ப்பு வந்தது. ஆனால், அங்கு இருந்தவர்கள் உடனே எல்லா படத்திலையும் அவரையே போடாதீங்க என்று கூறினார்கள். ஒரு சிலர் சாவித்திரியை நடிக்க வையுங்கள் என்று கூறினார்கள். உடனே நானே சொன்னேன். ஆமாம் எனக்கு பதிலாக அவரை நடிக்க சொல்லுங்கள் எத்தனை முறை நானே நடிக்க என்று தான் அந்த படத்தில் நடிக்க மறுத்தேன்” எனவும் நடிகை சரோஜா தேவி தெரிவித்துள்ளார்.

Recent Posts

பிரதமர் மோடி பற்றி அவதூறு.. 100 கோடி ரூபாய் பேரம்.! டி.கே.சிவகுமார் மீது பரபரப்பு குற்றசாட்டு.!

சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…

32 mins ago

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி !! ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…

41 mins ago

ஒழுங்கா நடிக்கலைனா அடிப்பாரு! மம்முட்டி குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்?

சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…

2 hours ago

ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் இனி வீட்டிலேயே செய்யலாம்.!

Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…

2 hours ago

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

4 hours ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

11 hours ago