உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்த கூடாது எனவும், கோவில் திருவிழாக்களை தவிர்த்து மற்ற இடங்களில் கால்நடைகளை வெட்ட கூடாது எனவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் ஒரு பெண் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் . அந்த வழக்கில், தாங்கள் வசிக்கும் பகுதியில் அனுமதியின்றி ஒருவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார் . அதனால், குடியிருப்புகளுக்கு தொந்தரவு இருக்கிறது அதனை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.
கோவில் திருவிழாக்கள் : இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, உள்ளாட்சி அமைப்புகளின் உரிய அனுமதி இன்றி இறைச்சி கடைகளை நடத்த கூடாது எனவும், கோவில் திருவிழாக்களை தவிர்த்து, கிராம புறப்பகுதிகளில் அனுமதியின்றி இறைச்சி கடை நடத்தவோ, கால்நடைகளை வெட்டவோ அனுமதி இல்லை என கூறினர்.
அனுமதியின்றி இறைச்சி கடை : மேலும் விசாரிகையில் சம்பந்தப்பட்ட இறைச்சிக்கடை நபர் கோழி இறைச்சி கடை நடத்த மட்டுமே அனுமதி வைத்திருந்தார் எனவும், அதனால் அவர் மாட்டிறைச்சி நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டனர். அடுத்ததாக, உரிமம் இல்லாமல் நடத்தப்படும் இறைச்சி கடைகள் பற்றி உரிய விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…