இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேசன்களுக்கு தடை – மத்திய அரசு தகவல்!

மத்திய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்களை முடக்கியுள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் தகவல்.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT) கீழ்,அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான,நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்ய,மத்திய அரசு இதுவரை 320 மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தில்  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

எதற்காக முடக்கம்?:

மேலும்,மாநிலத்தின் இறையாண்மை,ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன் கருதி இந்த மொபைல் அப்ளிகேஷன்கள் முடக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,அவர் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் :

“அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான,நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன்,2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்ட பிரிவு 69A இன் கீழ், மத்திய இதுவரை 320 மொபைல் பயன்பாடுகளை முடக்கியுள்ளது” என்று மத்திய கூறினார்.மேலும்,கடந்த பிப்ரவரி மாதத்தில் 49 மொபைல் அப்ளிகேசன்கள் மீண்டும் தடை செய்யப்பட்டன என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து,மற்றொரு எழுத்துப்பூர்வ பதிலில்,ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2021 வரை சீனாவிடமிருந்து 2.45 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) இந்தியா பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

IPL2024: மழை காரணமாக இன்றைய போட்டி கைவிடப்பட்டது..!

IPL2024: மழை காரணமாக ராஜஸ்தான், கொல்கத்தா அணி மோதவிருந்த போட்டி கைவிடப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் குவஹாத்தியில்…

6 hours ago

பஞ்சாபை பந்தாடி 2-வது இடத்திற்கு முன்னேறியது ஹைதராபாத் அணி ..! 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற 69-வது ஐபிஎல் போட்டியில்…

10 hours ago

5ஆம் கட்ட மக்களவை தேர்தல்… 8 மாநிலங்கள், 49 தொகுதிகள்…

சென்னை: மக்களவை தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குபதிவு நடைபெற்று…

13 hours ago

விடுதலை 2 படத்தில் கேமியோவில் மிரட்ட வரும் வில்லன் நடிகர்! யார் தெரியுமா?

சென்னை: வெற்றிமாறனின் 'விடுதலை பாகம் 2' படக்குழுவில் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக தகவல். இயக்குனர் வெற்றிமாறனின் நீண்ட கால இயக்கத்தில் இருந்து வரும்…

14 hours ago

அதிக சிக்ஸர்,அதிக ரன் யாரெல்லாம்? வாங்க டி20 உலகக்கோப்பை சாதனையை திரும்பி பார்ப்போம்!

சென்னை : டி20 உலகக்கோப்பை போட்டியில் அதிகம் சிக்ஸர்கள் விளாசிய வீரர், அதிவேகமாக சதம் விளாசிய வீரர் சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2024)  டி20…

16 hours ago

உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்கள் கழித்து மீட்பு.!

சென்னை: மால்டோவாவில் நான்கு நாட்களுக்கு முன், புதைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 74 வயது ஒரு மூதாட்டியின் மரணம் தொடர்பான விசாரணையின் போது,…

17 hours ago