மாஸ்க் போடுங்க ! 5 பேர் மட்டும் உள்ளே வரவும் ! வந்துவிட்டது நவீன கதவு

ஸ்வீடனை சேர்ந்த அஸ்ஸா அப்லோய் (assa abloy) எனும் நிறுவனம், 5 பேரை மட்டும் உள்ளே அனுப்பும் வகையிலான ஆட்டோமடிக் கதவை உருவாக்கியுள்ளது.

உலகளவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. உலக அளவில் இதுவரை, 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406,192 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்த வைரஸின் தாக்கத்தை குறைக்க பல நாடுகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், உணவகங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியவில்லை என்ற குற்றச்சாற்றுகள் எழுந்து கொண்டே வருகின்றன.

இந்நிலையில், ஸ்வீடனில் தலைமையாக கொண்டு செயல்படும் அஸ்ஸா அப்லோய் (assa abloy) எனும் நிறுவனம், 5 பேரை மட்டும் உள்ளே அனுப்பும் வகையிலான ஆட்டோமடிக் கதவை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அஸ்ஸா அப்லோய் நிறுவனம் கூறுகையில், கதவு மூலம் 5 பேர் மட்டுமே கடைக்குள் வரமுடியும். கடை வாசலில் ஒரு திரை உண்டு. அதில் எத்தனை பேர் உள்ளே இருக்கிறார்கள் என தெரியும். அதிலுள்ள சென்சார் மூலம் எத்தனை பேர் வருகிறார்கள் என பதிவாகி, அந்த திரையில் காட்டும்.

மேலும், ஐந்துபேருக்கு மேல் வந்தால் கதவுகள் திறக்காது. அதுமட்டுமின்றி, முகக்கவசம் அணியாமல் வந்தால், முகக்கவசம் அணிந்த பின் கதவுகள் திறக்கும் என தெரிவித்துள்ளது.

Recent Posts

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…

10 hours ago

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

12 hours ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

12 hours ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

12 hours ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

12 hours ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

12 hours ago