ஆக்ரோஷமாக கரையை கடக்கத் தொடங்கிய நிசர்கா புயல்.. மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல், தற்பொழுது மும்பையில் உள்ள அலிபாக் அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. மேலும், 138 ஆண்டுகளுக்கு பின் மும்பையில் புயல் தாக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த நிகர்சா புயல், இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், தற்பொழுது அலிபாக் அருகே ஆக்ரோஷமாக கரையை கடக்க தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிசர்கா புயலானது, மும்பையில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள அலிபாக் அருகே கரையை கடக்கும் எனவும், இந்த புயலால் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 

மும்பை கடலோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப்பணியில் தயார் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்கள் வரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மும்பை மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், 138 ஆண்டுகளுக்கு பின் மும்பையில் புயல் தாக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…

25 mins ago

ஹெட் மாதிரி கோலி விளையாடினாள் போதும் உடனே மக்கள் விமர்சிப்பாங்க! இர்பான் பதான் காட்டம்!

Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…

26 mins ago

தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…

26 mins ago

நாகூர் ஸ்பெஷல்.! கட்டுசோறு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…

42 mins ago

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் புகார்.! தற்போதைய நிலவரம் என்ன.?

C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…

1 hour ago

உங்கள் நகத்தை வைத்து உங்கள் அகத்தின் ஆரோக்கியத்தை தெரிஞ்சுக்கோங்க.!

Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…

2 hours ago