உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.

ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் அனைத்தும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான 15 கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.

உலகக்கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்வதில் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். யஸஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப், சாஹல், ஹர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் (மாற்று) வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நீண்ட ஆண்டுகளாக ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி சஞ்சு சாம்சன் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதுபோன்று சென்னையில் அணியில் கடந்த சீசனிலும் சரி, நடப்பு சீசனிலும் சரி மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி வரும் துபே உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.

எனவே சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடியவையாக உள்ளது. அதேசமயம் கடந்த உலகக்கோப்பையில் மிஸ்ஸான யுஸ்வேந்திர சாஹல் இந்த முறை என்ட்ரி கொடுத்துள்ளார். அதுபோன்று காயத்தில் மீண்டு வந்து ஐபிஎல்லில் கலக்கும் ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

மறுபக்கம், கேஎல் ராகுல், ருதுராஜ் உள்ளிட்டோர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் குறிப்பாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாட்டு வீர்ரகள் ஒருவருக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.