கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் 2-வது வெற்றியை பதிவு செய்தது..!

ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இன்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் – ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தனர். 134 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ஜோஸ் பட்லர் 5 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் சஞ்சு சாம்சன் இறங்கினார்.

சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 5 பவுண்டரி விளாசி 22 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய சிவம் துபே 22, டேவிட் மில்லர் 5 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.  கடைசி வரை களத்தில் சஞ்சு சாம்சன் 42*, மில்லர் 24* ரன்களுடன் நின்றனர்.

ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடி 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. கொல்கத்தா இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

murugan

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

4 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

4 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

4 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

4 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

5 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

5 hours ago