ஓடிடி யில் வெளியான பிரமாண்ட “பொன்னியின் செல்வன்.” ! பார்க்கலாம் ஆனால் ஒரு கண்டிஷன்..?

கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் மக்களின் பேரதராடுவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

PonniyinSelvan By End Of Week-4 [Image Source: Twitter ]

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான் உள்ளிட்ட பலர பிரபலங்கள் இந்த படத்தில் ஒவ்வொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய 5 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.

Ponniyin Selvan ON Amazon Prime [Image Source: Twitter ]

இந்த நிலையில். பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று பிரபல ஓடிடி தலமான அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது. ஆனால், வழக்கமாக அமேசான் பிரேமில் கணக்கு (Account) வைத்திருப்பவர்கள் இந்த படத்தை பார்க்கமுடியாது. அப்படி பார்க்கவேண்டும் என்றால் 199.ரூபாய் பணத்தை செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும்.

இதையும் படியுங்களேன்- ரிலீசுக்கு முன் முரட்டு வியாபாரம்.! மிரண்டு போய் இருக்கும் கோலிவுட்..! விஜயின் “வாரிசு” வேட்டை ஆரம்பம்….

Ponniyin Selvan ON Amazon Prime [Image Source: Twitter ]

மேலும், அமேசான் பிரேமில் கணக்கு (Account) வைத்திருப்பவர்கள்  பார்க்கவேண்டும் என்றால், வரும் நவம்பர் மாதம் வரை காத்திருக்கவேண்டும். விரைவில் அதற்கான ரிலீஸ் தேதியும் அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

IPL2024: மழையால் இன்றைய போட்டி ரத்தானது..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…

9 hours ago

காசுலாம் போச்சு .. ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியை பார்க்க டிக்கெட் புக் செய்த ரசிகர் ! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !!

சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…

13 hours ago

3 நொடியில் 100 கி.மீ ஸ்பீடு.. அசுர வேகத்தில் களமிறங்கிய BMW M 1000 XR.!

சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…

13 hours ago

பிளாங்க் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!

Plank exersize-பிளாங்க்  உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…

13 hours ago

மற்றவர்களை கவனிப்பது என்னோட வேலை இல்லை! விமர்சனங்கள் குறித்து இளையராஜா!

சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.  இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…

13 hours ago

அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

13 hours ago