சென்னை:82-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில்,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.82-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி ஒரே விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
இதற்கிடையில்,மத்திய அரசின் கலால் வரி குறைப்பால்,தீபாவளிக்கு பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது. இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது.
இந்த வேளையில்,மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது.இதனால்,பட்ஜெட் கூட்டத்தொடரின்போது,பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைக்கப்படும் அறிவிப்பு குறித்து வெளியாகுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…