தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.

தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இப்படியான சூழலில், தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு சம்பவங்களிலும் வாக்காளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது தொடர்பாக வேங்கைவயல் மற்றும் இறையூர் பகுதி மக்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அப்பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் இதுவரை வேங்கைவயல், இறையூர் பகுதி வாக்காளர்கள் வாக்கு செலுத்தவில்லை. இதனால் அந்த வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விடுகல்பட்டிபுதூர் எனும் கிராமத்தில் 300 விவசாய குடும்பங்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். அவர்கள் அப்பகுதி கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் திருப்பிய செலுத்திய பின்னரும் ரசீது தரவில்லை என்றும், அதனால் அடுத்தடுத்து கடன்கள் வாங்க முடியவில்லை என்றும், இது தொடர்பாக தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என கூறி தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு பகுதி கிராமத்தினர் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவ கழிவு தொழிற்சாலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அந்த தொழிற்சாலையால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.

திருவண்ணாமலை செங்கம் அருகே மெத்தக்கல் எனும் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி 16 ஆம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 500 வாக்காளர்கள் வாக்களிக்காமல் உள்ளனர்.

தென்காசி மாவட்டம் கே.கரிசல்குளத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனக் கூறி சுமார் 1045 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். இதுவரை அப்பகுதி வாக்குச்சாவடியில் 10 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையை அடுத்த பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்த ஏகனாபுரம், நாகப்பட்டினம் கிராம மக்கள் இன்று மக்களவைத் தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.

தென்காசி மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி எனும் கிராமத்தில் வீட்டுமனை நில பட்டா விவகாரம் தொடர்பாக தங்கள் வைத்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறி இந்த மக்களவைத் தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!

Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…

9 mins ago

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

25 mins ago

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…

39 mins ago

இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும்! சங்கமித்ரா குறித்து சுந்தர் சி!

Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…

46 mins ago

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

2 hours ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

2 hours ago