சினிமா

இந்தியன் 2 படத்துடன் மோத தயாரான பார்த்திபன்! தலைக்கு தில்ல பாத்தீங்களா…

இந்தியன் 2 : ஜூலை 12-ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் மீது இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் இந்த படம் கண்டிப்பாக வசூலில் முதல் நாளில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இவ்வளவு பெரிய படத்துடன் வேறு படங்கள் அதே தினத்தில் வெளியானது என்றால் நிச்சியமாக எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாக வரவேற்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

வசூல் சரியாக கிடைக்காது என்பதன் காரணமாகவே பெரிய படங்களுடன் படத்தை இறக்க பலரும் யோசிப்பது உண்டு.  ஆனால், பார்த்திபன் அதனை பற்றி எல்லாம் யோசிக்காமல் தான் அடுத்ததாக இயக்கி நடித்துள்ள ‘டின்ஸ்’ திரைப்படத்தினை இந்தியன் 2-வுடன் இறக்க முடிவெடுத்துள்ளார். ‘டின்ஸ்’  திரைப்படமும் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Teenz clashing with Indian2 [file image]
ஏற்கனவே, ஜூலை 12-ஆம் தேதி இந்தியன் 2 படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்துடன் பார்த்திபன் அவர் நடித்துள்ள படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது அவருடைய ‘டின்ஸ்’ படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஒரு சில நெட்டிசன்கள் கொஞ்சம் தாமதாக படத்தை ரிலீஸ் செய்திருக்கலாம் என்று கூறினாலும் ஒரு சிலர் பார்த்திபன் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.

 

Recent Posts

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

1 hour ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

2 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

2 hours ago

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! DA 4% உயர்வு..!

குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…

2 hours ago

12ம் வகுப்பு தேர்ச்சி.. B.Tech டிகிரி.! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!

இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…

2 hours ago