“தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு,வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு” – எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை:தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடத்திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக புதிய ரயில் வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

வெறும் ஆயிரம் ரூபாய்:

“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து PINK Book என்று சொல்லப்படும் இரயில்வே திட்ட புத்தகம் நேற்று மாலை வெளியிடப்பட்டது.அதில் தமிழகத்துக்கான புதிய வழித்தடத் திட்டங்களான திண்டிவனம் -செஞ்சி திருவண்ணாமலை;திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டு-புத்தூர்; ஈரோடு- பழனி ;சென்னை -கடலூர்; மதுரை- தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக; ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை- ஆவடி; மொரப்பூர்- தர்மபுரி ஆகிய எட்டு புதிய வழித்தடத்திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எனினும்,ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய வழித்தடத்திட்டத்திற்கு 207 கோடி ரூபாய் தேவை.அதற்கு 59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதை வரவேற்கிறேன். ஆனால்,காட்பாடி -விழுப்புரம் ரெட்டப்பாதை திட்டத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் -கரூர்- திண்டுக்கல் இரட்டை பாதை திட்டத்திற்கு 1,600 கோடி தேவை. ஆனால்,வெறும் ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வன்மையான கண்டனம்:

அதேபோல ஈரோடு -கரூர் இரட்டை பாதை திட்டத்திற்கு 650 கோடி தேவை. ஒதுக்கப்பட்டுள்ளது வெறும் ஒரு கோடி ரூபாய். தொடர்ந்து மூன்றாவது பட்ஜெட்டாக இப்படி மிகக் குறைந்த தொகையை தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும்,மதுரை -வாஞ்சி மணியாச்சி -தூத்துக்குடி ரெட்டைபாதையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வாஞ்சி மணியாச்சி நாகர்கோயில் திட்டத்திற்கு 1700 கோடி தேவை.இதுவரை 750 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 360 கோடியும் வரும் ஆண்டில் 425 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. திட்டம் விரைந்து முடிவடைய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

இந்தத் திட்டம் முடிவடைந்தால் போக்குவரத்து எளிதாகும்:

மதுரை போடியாகனூர் அகல ரயில் பாதை திட்டம் பத்தாண்டுகளுக்கும் மேலாக தாமதமாகிக்கொண்டிருக்கிறது.இது பற்றி பலமுறை முறையீடு செய்ததன் தொடர்சியாக நடப்பாண்டு(2021-22) 104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் ஆண்டுக்கு 125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எங்களது தொடர்ந்த கோரிக்கைக்கு செவிமடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டத்திற்க்கு 900 கோடி முதலீடு செய்ய வேண்டும் இதுவரை 250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு 700 கோடியும் அடுத்த ஆண்டுக்கு400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் முடிக்க ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். இந்தத் திட்டம் முடிவடைந்தால் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கும் தூத்துக்குடிக்கும் இரட்டைப்பாதை முடிவடைந்தது போக்குவரத்து இலகுவாகும்.

தமிழக புதிய வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு.. X குரோமோசோம் மரபணு அவசியம் – புதிய ஆய்வு!

சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…

16 mins ago

எப்பா .. இதுலாம் செஞ்சாதான் ஆர்சிபி பிளே ஆஃப் வர முடியுமா ? குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…

21 mins ago

272 சீட்… தேர்தலில் தோற்றால் பாஜகவின் பிளான் ‘பி’ என்ன.? அமித்ஷா பதில்.!

சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…

26 mins ago

இன்று மும்பை லக்னோ மோதல்! கம்பேக் கொடுப்பாரா ரோஹித் சர்மா?

சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…

45 mins ago

யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…

56 mins ago

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

1 hour ago