நீட் தேர்வு முறைகேடு உண்மையில்லை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்.!

By

நீட் தேர்வு 2024 : கடந்த ஆண்டு மே-5 ம் தேதி அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) நடைபெற்றது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன்-5 மாலை வெளியானது.

அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். அது மட்டும் இல்லாமல், இந்த ஆண்டு வெளியான முடிவுகளில் நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதாவது, ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

தற்பொழுது, நீட் தேர்வு முறைகேடு புகாரில் உண்மையில்லை என NTA (தேசிய தேர்வு முகமை) விளக்கமளித்துள்ளது. முதல் மதிப்பெண் எடுத்த 67 பேரில், 50 பேருக்கு இயற்பியல் பாடத்தில் மாற்றப்பட்ட ஒரு விடைக்காக மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும், 6 பேருக்கு தேர்வு எழுத போதிய நேரம் அளிக்கப்படாததால் ரிட் மனுக்கள், குறைதீர் ஆணைய பரிந்துரை அடிப்படையில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Dinasuvadu Media @2023