IndVsSA: பந்துவீச்சில் வெறித்தனம் காட்டிய சிராஜ்! ஆல்-அவுட் ஆன தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று (ஜனவரி3) இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை கொடுத்து தடுமாறி விளையாடி வந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 2, டீன் எல்கர் 4, ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட் இழந்தார்கள்.

அவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்கிய டோனி டி ஜோர்ஜி 2, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3, ஆகியோரும்  தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்து வெளியேறினார்கள்.  டேவிட் பெடிங்ஹாம்12 , கைல் வெர்ரைன் 15 , மார்கோ ஜான்சன் 0, கேசவ் மகாராஜ் 3, ககிசோ ரபாடா 5, நந்த்ரே பர்கர் 4 என ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

23.2 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

முகமது சிராஜ் வீசிய பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா  அணி தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்தது. 9 ஓவர்கள் பந்து வீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார் ஆகியோரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

Recent Posts

6 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள்..  பிரதர் மோடி தகவல்.!

சென்னை:  கடந்த 6,7 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என பிரதர் மோடி பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தை எட்டி வருவதால் அரசியல் தலைவர்களின் பிரச்சாரமும்…

1 min ago

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க உதவும் உணவுகள் இதோ.!

Pregnancy food- கர்ப்பிணிகள் வாந்தி நிற்பதற்கும் மற்றும் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். கர்ப்பிணிகள்  முதல் மூன்று மாதங்கள் மிகக் கவனமாக…

17 mins ago

நத்திங் கீழ் CMF வெளியிடும் முதல் 5G ஸ்மார்ட்போன்.! பட்ஜெட் விலையில் எப்போது அறிமுகம்?

CMF Phone 1 : நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நத்திங் (Nothing) நிறுவனம்…

22 mins ago

புதிய வரலாற்றை படைத்த மான்செஸ்டர் சிட்டி ..! 4 கோப்பைகளை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனை !

சென்னை : பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி…

32 mins ago

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டரில் கடைசியாக பயணித்த வீடியோ காட்சி…

சென்னை: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் -…

42 mins ago

தமிழகத்தில் 4 மணி வரை இந்த 22 மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், இந்த கோடை காலத்திலும்…

1 hour ago