“மோடி என்னுடைய நண்பர்”டொனால்டு டிரம்ப்..!!

வாஷிங்டன்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில், 73வது பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்க உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.
Image result for வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டம் செப்டம்பர் 25 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில், உலக போதை பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம் ஒன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் இன்று நடைபெற்றது.
Image result for ஐ.நா.வு
கூட்டம் முடிவில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே சுவராஜை கட்டி பிடித்துக்கொண்டார். பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் சுஷ்மா சுவராஜை அறிமுகப்படுத்தினார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் சுஸ்மா சுவராஜ் , ” பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அன்பினை பெற்று வந்துள்ளேன் என   கூறினார் அதற்க்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நான் இந்தியாவை நேசிக்கிறேன். எனது நண்பர் பிரதமர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள்” என்று தெரிவித்தார்.
DINASUVADU

Leave a Comment