போடுறா வெடிய ..! வாத்தியாராக ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் கொடுத்த மாஸ்டர் டீசர்.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் அவர்களின் மாஸ்டர் படத்திலிருந்து டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன்,சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .

கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரிலீஸ் தேதி திரையரங்குகள் திறந்த பின்னரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை . விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி ட்ரீட்டாக சன் தொலைக்காட்சியின் யூடுயூப் சேனலில் வெளியிடப்படும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

அதன்படி ரசிகர்களின் காத்தருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து மாஸ்டர் டீசர் வெளியாகியுள்ளது . மாஸ்ஸான பின்னணி இசையில் பட்டைய கிளப்பும் வசனங்களுடன் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் என்டரி வேற லெவலில் உள்ளது சூப்பரான சண்டைக்காட்சிகளுடன் இந்த டீசரில் தளபதி கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

ஒரு சில காட்சிகளில் மட்டுமே மாளவிகா மோகனன் என்டரி கொடுத்துள்ளார் .  மொத்தத்தில் மாஸ்டர் டீசர் தளபதி ரசிகர்களுக்கு தீபாவளியை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தது என்றே கூறலாம். தற்போது டீசரை தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

4 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

10 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

11 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

12 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

13 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

13 hours ago