Kuwait Fire - Kerala Govt

குவைத் தீ விபத்து – கேரள அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு.!

By

கேரளா : குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் நேற்று ஏற்பட்டபயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். தற்போது, குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரள மக்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று காலை கூடிய அவசர அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக  கூறப்படுகிறது. அதன்படி, இந்த தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அது மட்டுமில்லாமல், இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

மேலும், தொழிலதிபர்கள் எம்.ஏ.யூசுப் அலி மற்றும் ரவிப்பிள்ளை ஆகியோர் இறந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் வழங்குவதாக கேரள முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் உடல்களை திரும்பப் பெறவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் செல்கிறார். ஒரு தகவலின்படி, இந்த சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Dinasuvadu Media @2023