கேஜிஎப்-2 இசையை பயன்படுத்திய விவகாரம்.! ராகுல்காந்திக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

கே.ஜி.எப் 2 இசையை பயன்படுத்திய விவகாரம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விளக்கம் அளிக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவு. 

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் நடைபயணம் மேற்கொண்ட விடியோ கிளிப்பாக தயார் செய்து அதில் கே.ஜி.எப் 2 இசையை கோர்த்து அதனை பாரத் ஜோடோ யாத்ரா எனும் டிவிட்டர் பக்கத்திலும், காங்கிரஸ் டிவிட்டர் தளத்திலும் பதிவிடப்பட்டது.

அனுமதியின்றி கே.ஜி.எப்-2 இசையை பயன்படுதியாக கூறி கடந்த மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எம்ஆர்டி மியூசிக் நிறுவனமானது அவர்களின் வழக்கறிஞர் எம்.பிரணவ் குமார் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த மனுவில் வீடியோ பதிவிட்ட காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடோ யாத்ரா ஆகிய அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், சம்மந்தப்பட்ட டிவீட்களை நீக்குமாறு டிவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

தற்போது இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலே மற்றும் நீதிபதி அசோக் எஸ்.கினகி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சுப்ரியா ஷிரினேட்  ஆகியோர் விளக்கம் அளிக்க அவர்களுக்கு நோட்ட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

Leave a Comment