ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும்,120 க்கும் மேற்பட்டவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்ட ராணுவ விமானம்..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் உள்பட மொத்தம் 120க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் இந்திய ராணுவ விமானம் டெல்லி புறப்பட்டது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசு படைகளுக்கும், தாலிபான் படைகளுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதனையடுத்து,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஆட்சி அதிகாரத்தையம்  கைப்பற்றினார்கள்.இதனால்,பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள்,அதிகாரிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.

அந்த வகையில், ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று முன்தினம் இந்தியர்கள் 129 பேர் இந்தியா திரும்பிய நிலையில் மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானம் ஆப்கான் தலைநகர் காபூல் செல்ல இருந்தது.

ஆனால்,ஆப்கான் மக்கள் உள்பட பலர் அதிக அளவில் ஒரே நேரத்தில் விமான நிலையத்தில் கூடியதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டது.இதற்கிடையில்,கூட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்க படையினரால் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இதில் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது.இதனால்,அங்கு செல்ல இருந்த 2 விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்தது.

இதனையடுத்து,தாலிபான்கள் வசம் உள்ள ஆப்கானிஸ்தானில் சிக்கிய இந்தியர்களை மீட்க இந்திய ராணுவ விமானம் புறப்பட்டு அங்கு சென்றது.

இந்நிலையில்,இந்திய விமானப்படையின் சி -17 விமானம் இந்திய அதிகாரிகள் உள்பட 120க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் காபூலில் இருந்து இன்று புறப்பட்டுள்ளது.இதற்கிடையில்,ஆப்கானிலிருந்து இந்தியா வருவதற்கு e- emergency X misc விசா முறையில் உடனடி விசா பெற்று கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Recent Posts

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

18 mins ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

21 mins ago

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

37 mins ago

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

1 hour ago

கேரளாவில் அதிர்ச்சி.. பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி தூக்கி வீசிய கொடூரம்.!

Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…

1 hour ago

சிங்கம் பட பாணியில் பிரஜ்வலை பிடிக்க வெளிநாடு செல்லும் சிறப்பு புலனாய்வு குழு.!

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…

1 hour ago