#IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் தொடக்க வீரர் குவின்டன் டி காக் 33 ரன்னும், ரோகித் 12 ரன்களில் வெளியேறினர்.

பின்னர், திவாரி அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். திவாரி 42 ரன்கள் விளாசினார். மத்தியில் இறங்கிய க்ருனால் பாண்ட்யா 3 , பொல்லார்ட் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்தனர்.

163 இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷேன் வாட்சன் இருவரும் களமிறங்கினார். தொடக்க வீரர்கள் இருவருமே சொற்ப ரன்களில் வெளியேற பின்னர், டு பிளிஸ்சிஸ் அம்பத்தி ராயுடு களமிறங்கினார். நிதானமாக விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு நடப்பு தொடரில் தனது முதல் அரைசதத்தை நிறைவு செய்து 71 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா களமிறங்கி 10 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  சிறப்பாக விளையாடி வந்த டு பிளிஸ்சிஸ் அரைசதம் நிறைவு செய்து 58* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

கடைசியாக சென்னை அணி 19.2 ஓவரில்  5 விக்கெட்டை பறிகொடுத்து 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  மும்பை அணியில் ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பேட்டின்சன், பும்ரா, க்ருனல் பாண்டியா மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர்  தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.முதல் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றிக்கணக்குடன் இத்தொடரை துவங்கியுள்ள சென்னையின் பயிற்சியாளர் முதல் போட்டி குறித்து தெரிவிக்கையில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் விளையாடியது வீரர்களுக்கு வித்தியாசமான ஒரு  உணர்வை அளித்தது, இருப்பினும் அவர்கள் சூழலை திறம்பட கையாண்டார்கள் என்று  CSK அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

kavitha

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

7 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

12 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

13 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

13 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

13 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

13 hours ago