Categories: IPL

IPL 2018:உன்னமையிலே அங்குள்ள ரசிகர்கள் கிரேட் ..!இந்திய ரசிகர்கள் ரொம்ப மோசம் ..!இந்தியர்களுக்கு ஒன்லி சிக்ஸ் ,பவுண்டரி மட்டும் தான் தேவை …!கொதித்த இந்திய அணியின் சுவர் வீரர் …!

இந்திய கிரிக்கெட்  வீரர் செடேஷ்வர்  புஜாரா இங்கிலாந்தின்  யார்க்‌ஷயர் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,யார்க்‌ஷயரில் கடந்த இரண்டு சீசன்களில் பேட்ஸ்மென்கள் அதிகமான ஷாட்களை ஆடினர், தங்கள் தவறுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொண்டனர். எனவே இம்முறை கொஞ்சம் நிதானித்து பிறகு ஷாட் ஆட முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஆனாலும் எந்த வீரராக இருந்தாலும் அவரவர் பலத்துக்குத்தான் ஆட வேண்டும். கிரீசில் அதிக நேரம் செலவிட வேண்டும், பந்துகள் ஸ்விங் ஆகும் போது நிறைய பொறுமை அவசியம். கொஞ்சம் தடுப்பாட்ட உத்தியக் கடைபிடிக்க வேண்டும். எப்போது அடித்து ஆட வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். பந்துகள் அதிகமாக ஒன்றும் ஆகாத போது அடித்து ஆடலாம்.

சில வேளைகளில் நான் நினைக்கிறேன், நான் பந்துகளை ஆடாமல் விடும்போது ரசிகர்கள் உண்மையில் அதனை விரும்புவதில்லை பாராட்டுவதில்லை. காரணம் குறைந்த ஓவர் கிரிக்கெட்டின் தாக்கமே. ஆனால் இங்கிலாந்து வந்த பிறகு என் பணி என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

இந்திய அணியில் பந்தை ஆடாமல் விடுவதைப் புரிந்து கொள்வார்கள். ரசிகர்கள் பார்வை குறித்து நான் பேசுகிறேன். அவர்கள் பவுண்டரிகளும் சிக்சர்களும் வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இங்கு வந்த போது ரசிகர்கள் கிரிக்கெட்டைப் புரிந்து கொள்கிறார்கள். பந்தை ஆடாமல் விட்டால் கூட இங்கு ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

பவுலர் நன்றாக வீசும்போதும், நிலைமைகள் சவாலாக இருக்கும் போதும் முதலில் விக்கெட்டைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை இங்கிலாந்து ரசிகர்கள் புரிந்து கொள்கிறார்கள். நன்றாக செட் ஆகிவிட்டால் பிறகு நான் ரன்கள் ஸ்கோர் செய்யத் தொடங்குகிறேன்.இவ்வாறு கூறினார் இந்திய கிரிக்கெட்  வீரர் செடேஷ்வர்  புஜாரா.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ராஜீவ் காந்தி நினைவு தினம் – காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி.!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர்வர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்…

5 mins ago

டி20 அணியை இங்கிருந்து தேர்வு செய்யுங்கள் ..! அஸ்வினுக்கு விளக்கம் அளிக்கும் கவுதம் கம்பிர்!

சென்னை : இந்தியன் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர், ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் இந்திய  அணியின் தேர்வுகளை பற்றி சில தெளிவுகளை விளக்கமளித்து பேசி இருந்தார்.…

6 mins ago

ஈரான் அதிபர் ரைசி மரணம்- இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

சென்னை : ஈரான் அதிபர் மறைவையொட்டி நாடு முழுவதும் இன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்…

22 mins ago

பிரம்மாண்டமான குவாலிபயர்-1! இறுதி போட்டிக்கு தகுதி பெற போகும் முதல் அணி எது ?

சென்னை : ஐபிஎல் தொடரின்  இறுதி போட்டிக்கு தகுதி பெறும் முதல் அணிக்கான குவாலிபயர் 1 போட்டியானது இன்று நடைபெறுகிறது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த…

3 hours ago

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…

14 hours ago

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

16 hours ago