#AUSVIND: தொடர் தோல்வியை தழுவிய இந்தியா.. தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்றுநடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச், டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். சிறப்பான கூட்டணி அமைத்த இந்த ஜோடியில் பின்ச் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்த வார்னர் அரைசதம் அடித்து 83 ரன்களில் ரன் -அவுட்டாகி வெளியேறினார்.  பின்னர், ஸ்மித் ஒருபுறம் அதிரடியாக விளையாட அவருக்கு மர்னஸ் நிதானமாக விளையாடி கூட்டணி கொடுத்தார். அதிரடியாக ஆடிய ஸ்மித் 104 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 389 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், தவான் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே தவான் 30 ரன்களில் வெளியேற, பின்னர் ஸ்ரேயாஸ் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த அகர்வால் 28 ரன்னில் வெளியேற இதையெடுத்து, இந்திய அணியின் கேப்டன் கோலி களமிறங்கினார். ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் அவர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 38 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர், விகெட் கீப்பர் கே.எல் ராகுல் களமிறங்க கோலியுடன் ராகுல் கைகோர்த்து அணியின் எண்ணிக்கை சற்று உயர்த்தினர். இவர்களின் கூட்டணி மூலம் இந்திய அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. அதிரடியாக விளையாடி வந்த கோலி சதம் அடிப்பார் என்று  ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 89 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து கே.எல் ராகுல் 76 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

பின்னர்,களம்கண்ட  ஹர்திக் 28, ஜடேஜா 24 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் மட்டுமே எடுத்தனர், இதனால் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி வருகின்ற 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

murugan
Tags: AUSvIND

Recent Posts

மீண்டும் ஏகிறியது தங்கம் விலை…சவரன் ரூ.360 உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…

9 mins ago

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…

23 mins ago

இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!

Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…

26 mins ago

இந்த வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்.. டூ பிளெசிஸ் பெரும் மூச்சு!

IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…

53 mins ago

‘ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையாது’ – டேனியல் வெட்டோரி

Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…

1 hour ago

தேர்தல் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி.! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…

1 hour ago