IND Vs SL: குல்தீப் யாதவ் அவுட்: முக்கிய வீரர் சேர்ப்பு-பிசிசிஐ அறிவிப்பு..!

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 2 டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து,  பெங்களூருவில் மார்ச் 12 முதல் 16 வரை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு சேர்த்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் அக்சர் படேல் இணைந்தவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), பிரியங்க் பஞ்சால், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், ஆர். சௌரப் குமார், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், முகமது. ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அக்சர் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.