இந்திய எல்லையின் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்து எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. பிரச்னைக்கு சுமுக தீர்வு காண இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை லடாக் அருகே சீன எல்லைக்குள் உள்ள மோல்டோ என்ற இடத்தில் நேற்று துவங்கியது. நம் தரப்புக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்கும் சீனாவுக்கு மேஜர் ஜெனரல் லியு லின்னும் தலைமை வகித்தனர்.முதல் முறையாக இந்த பேச்சின் போது இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே ரஷ்யாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு வீரர்களும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட ஐந்து அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் நேற்றைய பேச்சுவார்த்தை நடந்தது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…