என் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய சொல்லவில்லை!!மாறி மாறி பேசிய சிம்பு விளக்கம்

ஏதோ ஒரு விஷயத்தை நெகட்டிவாக கூறினால்தான் போய் சேருகிறது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் மிக சிறந்த, பிரபலமான நடிகராக வளம் வருகிறார்.  இவரது படங்கள் இவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. மேலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில்  சமீபத்தில் யாரும் தனக்கு பிலெக்ஸ், பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம். கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார்.பின்னர் சில நாட்கள் கழித்து ,ரசிகர்கள் இதுவரை இல்லாத அளவு பேனர்களை வைக்க வேண்டும், அண்டாவில் பால் கொண்டு வந்து ஊற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.இதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.

Related image

இந்நிலையில் தற்போது மீண்டும் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,  அண்டாவில் பால் காய்ச்சி மக்களுக்கு கொடுக்க சொன்னேன், கட் அவுட்டுக்கு ஊற்ற சொல்லவில்லை. பால் அபிஷேகம் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.என் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய சொல்லவில்லை. படம் பார்க்க வருவோருக்கு அண்டா நிறைய பால் காய்ச்சு கொடுங்கள் என்று கூறினேன்.ஏதோ ஒரு விஷயத்தை நெகட்டிவாக கூறினால்தான் போய் சேருகிறது. அதனால்தான் அண்டாவில் பால் ஊற்றுமாறு தெரிவித்தேன்.உயிரில்லாத ஒரு கட்அவுட்டுக்கு பால் ஊற்றுவதைவிட, உயிருள்ள மனிதர்களுக்கு வழங்குமாறு தெரிவித்தேன்.இவ்வாறு நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

Leave a Comment