லைஃப்ஸ்டைல்

தாய்ப்பால் அதிகரிக்க மருந்து குழம்பு செய்வது எப்படி?

மருந்து குழம்பு -தாய்ப்பால் அதிகரிக்கும் மருந்து குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்;

  • கடுகு= ஒரு ஸ்பூன்
  • கொத்தமல்லி விதைகள்= ஒரு ஸ்பூன்
  • மிளகு= ஒரு ஸ்பூன்
  • சீரகம் =ஒரு ஸ்பூன்
  • நல்லெண்ணெய்= நான்கு ஸ்பூன்
  • சுண்டைக்காய் வத்தல் =ஒரு கைப்பிடி அளவு
  • பூண்டு =முப்பது பல்
  • சின்ன வெங்காயம்= 15
  • பெருங்காயம் =அரை ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
  • புளி= எலுமிச்சை அளவு
  • முருங்கைக்காய் =1

செய்முறை;

முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு ,மிளகு, சீரகம், கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும். தற்போது ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் சின்ன வெங்காயம் சேர்க்கவும். சின்ன வெங்காயம் வதங்கிய பிறகு சுண்டக்காயை சேர்த்து வதக்கவும்.

பிறகு அரைத்த பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். இப்போது புளியை ஊறவைத்து கரைத்து  சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு மற்றும் முருங்கைக்காய் சேர்த்து குழம்பை நன்றாக கொதிக்க வைக்கவும். குழம்பு எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க வைத்து இறக்கினால் மருந்து குழம்பு தயாராகிவிடும்.இந்த குழம்பு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் .

Recent Posts

அவருக்கு பாரத ரத்னா கொடுக்கணும்..! இந்திய அரசுக்கு சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவர் மிட்-டே பக்கத்தில் எழுதிய கட்டுரையில் இந்திய அணியின் பயிற்சியாளருக்கு பாரத் ரத்னா விருது வழங்க…

6 hours ago

இந்த டிகிரி முடிச்சுடீங்களா? அப்போ இந்த அரசாங்க டேட்டா என்ட்ரி வேலை உங்களுக்கு தான்..!

சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலத்தில் ஆடியோலஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ரேடியோகிராபர்,…

6 hours ago

2 நாள் பயணமாக ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.!

பிரதமர் மோடி : மூன்று நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று காலை ரஷ்யா புறப்பட்டார். அங்கு, புதின் உள்ளிட்டோரை…

6 hours ago

மிரட்டும் சண்டை…தெறிக்கும் வசனங்கள்…வெளியானது வணங்கான் டிரைலர்!

வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய 'வணங்கான்'  படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண்…

7 hours ago

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் : ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்.!

விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்டம்…

7 hours ago

உங்க வீட்ல பல்லி தொல்லை அதிகமா இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

Lizard- பல்லியை வீட்டிலிருந்து முழுமையாக விரட்டி அடிக்க கூடிய டிப்ஸ்களை இங்கே காணலாம். நம்மில் பலருக்கும் பாம்பை விட பல்லிக்கு  தான் அதிகம் பயம் இருக்கும். இதனால்…

7 hours ago