வரலாற்றில் இன்று(27.01.2020)… ரஷ்யா பொதுவுடைமை தலைவர் விளாடிமிர் லெனின் நல்லடக்கம் செய்யப்பட்ட தினம்..

  • ரஸ்யா பொதுவுடைமை தலைவர், விளாடிமிர் லெனின் அவர்களை செஞ்சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட தினம் இன்று.
  • இந்நாளில் இவரை நினைவு கொள்வோம்.

பிறப்பு:

ரஸ்யா பொதுவுடைமை தலைவர், விளாடிமிர் லெனின்  ஏப்ரல் மாதம் 22ம் தேதி, 1870ம் ஆண்டு,  ரஷ்யாவில் உள்ள வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் பிறந்தார்.

குடும்பம்:

அவரது பெற்றோர் இல்யா உல்யனாவ்  மற்றும் மாயா உல்யானவ் ஆவர். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். இவருக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும்  இருந்தனர்.

பொதுவுடைமை சிந்தனை:

லெனின் ரஸ்யாவில், ஒரு சிறந்த செயல்வீரராக விளங்கினார். அங்கு பொதுவுடமை அரசை நிறுவுவதற்குக் இவர் கண்ணும் கருத்துமாகப் ஈடுபட்டார். இவர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறை அரசியல் செயற்படுத்தினார். இதனால், 1917 நவம்பர் முதல் உலகம் எங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. இன்று உலக மக்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பொதுவுடமை ஆட்சியின் கீழ் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகய நிகழ்வை நிகழ்த்திய விளாடிமிர் லெனின் மீது 1918-ஆம் ஆண்டு ஒரு துப்பாக்கி சூடு நடந்தது.

அதை ஒரு ரஷ்யப் பெண் நிகழ்த்தினார். இருப்பினும் அந்நிகழ்வில் லெனின் உயிர் தப்பினார். லெனின் இடைவிடாமல் நீண்டகாலம் பொது உடைமை சிந்தனையை உலகிற்கு கொண்டு செல்ல அயராது உழைத்து வந்ததன் காரணமாக, அவருடைய உடல் நலம் சீர் குலைத்தது. இதன் காரணமாக 1922 மே மாதம் லெனினுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. பின் அவருக்குத் திசு தடித்தல் என்னும் நோய் முற்றியதால் பேச முடியாத நிலையும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, டிசம்பர் மாதம்  இவரது வலக்கையும் செயல் இழந்தது.

இறப்பு:

அதன் பின்   முற்றிலும் செயலற்ற நிலையிலேயே இருந்த லெனின் தனது 54-ம் வயதில் 1924-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் நாள் மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார். இவருடைய மறைவு உலக  மக்களை பெரும் துயரத்தில் ஆழ்ந்தியது. இத்தகைய சிறந்த கொள்கையை உலகிற்கு வளர்த்து சென்ற மறைந்த லெனின் உடல் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்ட தினம் இன்று. இவருடைய  உடல் பதப்படுத்தப்பட்டு   மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் ஒரு அழகான கல்லறையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.  இவரது உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை காண  ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து  வருகிறார்கள்.

Kaliraj

Recent Posts

ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் மயங்க் யாதவ் ? இது தான் காரணம் !

Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…

47 seconds ago

28 வயதிலே இளம் இசையமைப்பாளர் மரணம்.! அதிர்ச்சியில் தமிழ் சினிமா…

RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…

12 mins ago

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

38 mins ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

49 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

1 hour ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

1 hour ago