,
IQ level

உங்கள் ஐ கியூ லெவல் அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ..!

By

Brain development  -ஐ கியூ என்பது என்ன மற்றும் ஐ க்யூ அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

ஐ கியூ என்றால் என்ன?

ஐ கியூ( intelligence quotient) இதன்படி உங்கள் புத்தி கூர்மையின் அளவு எந்த அளவில் உள்ளது என்பதை கணக்கிடுவதாகும். உதாரணமாக ஐசக் நியூட்டனின் ஐ க்யூ 190 ஆகும். அதேபோல் இந்தியாவின் அனுஷ்கா தீக்ஷித் ஐ க்யூ 162 ஆகும்.

இன்டெலிஜென்ஸ் என்றால்  ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொண்டு அதை நினைவில் வைத்துக் கொள்வது என்பதாகும். அதாவது உங்கள் மூளையின் புத்தி கூர்மை எந்த அளவிற்கு உள்ளது என்பதை குறிப்பிடுவதாகும்.

199 நாடுகளில் ஒரு கணக்கெடுப்பின்படி சிங்கப்பூரில் வாழும் மக்களின் ஐ க்யூ லெவல் 108 ஆகும் ஆனால் நம் இந்திய மக்கள் இந்த வரிசையில் 81 வரிசையில் உள்ளனர்.

ஐ கியூ லெவல் அதிகரிக்க செய்ய வேண்டியவை:

ஒருவரின் ஐ கியூ லெவல் 90 – 110 இருந்தால் சராசரியான நிலையாகும். இதுவே 110- 120 சூப்பர் இன்டெலிஜென்ஸ் அவர். இதுவே 120 – 140 இருந்தால் வெரி சூப்பர் இன்டெலிஜென்ட். 140 க்கு மேல் உங்கள் ஐகியூ  லெவல் இருந்தால் நீங்கள் தான் மேதை.

ஸ்டூவேர்ட்ஸ் ரிச் என்ற ஆராய்ச்சியாளர் ஐ கியூ லெவலுக்கும் நம் வாழ்க்கை முறைக்கும் நிறைய தொடர்பு உண்டு என்கிறார். அதாவது ஐ க்யூ அதிகம் இருப்பவர்கள் அதிக பணம் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்கிறார்.

தினமும் நீங்கள் நிறைய புதிய ஐடியாக்களை யோசிக்க வேண்டும். தற்போது இந்த பதிவை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் அதற்கு யாரோ ஒருவர் முன்பே யோசித்தது தான் காரணம். ஆமாங்க.. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பின்னாலும் ஒருவரின் ஐடியா தான் இருக்கும்.

உதாரணமாக கூகுள் நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் புதிய ஐடியாக்களை உருவாக்குவதற்கு என்று ஒரு நாள் தரப்படும். இதனால்தான் இன்றும் பெரிய அளவில் கூகுள் சாதனை படைத்து வருகிறது புதிய புதிய ப்ராஜெக்ட் களை உருவாக்குகிறது.

ரன்னிங், சைக்கிளிங் ,ஸ்விம்மிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மேலும் அறிவுத்திறனும் அதிகரிக்கும்.

பழக்கவழக்கங்கள்:

உங்களுக்கு ஏதேனும் ஒரு நல்ல பழக்க வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள் உதாரணமாக இசை, நாடகம் ,பாடல் கேட்பது போன்றவை. இவை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமலும்  மகிழ்ச்சியாகவும் நல்ல மனநிலையோடும்  வைத்துக் கொள்ளும். இதன் மூலம் உருவாக்கும் திறன் மேம்படும்.

தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் மூளையில் எண்டோர்பின் என்ற ரசாயனம் சுரக்கிறது. இது மனநலத்தை அதிகரிக்கிறது. அது  மட்டுமல்லாமல் ஹிப்போ கேம்பஸ் அளவை அதிகரிக்கிறது. இதுதான் நம் மூளையின் இன்பாக்ஸ் ஆகும். இதன் மூலம் படைப்பாற்றல் ,சிந்தனை திறன் அதிகரிக்கும் .

ஆகவே இந்த வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஐ கியூ லெவல் ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் டிவி, லேப்டாப் ,கணினி, தொலைக்காட்சி போன்றவற்றை நீங்கள் அதிகம் பார்க்கும் போது உங்கள் மூளை சோர்வடைகிறது .இதன் மூலம் மூளையின் செயல்திறன் குறைக்கப்படுகிறது.

நீங்கள் புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தவும் செய்ய வேண்டும். இது உங்கள் மூளையின் ஐ கியூ லெவல் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்விலும் நீங்கள் முன்னேற வழிவகுக்கும் .

Dinasuvadu Media @2023