Categories: Uncategory

உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளார்களா? பெற்றோர்களே இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க

  • குழந்தைகளை பற்றி பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விடயங்கள்.

குழந்தைகள் உள்ள வீட்டில், பெற்றோர்கள் எப்பொழுதுமே கவனமாக தான் இருப்பார்கள். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் தவழ தொடங்கி விடுவார்கள். அவர்களால் எல்லா பொருட்களையும் தங்களது கையில் எடுத்து விளையாட முடியும்.

குழந்தைகளுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. அனைத்து பெறோர்களும் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் விதமாக முதலுதவி பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எனவே குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.

மலசிக்கல்

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று மலசிக்கல். இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வு என்னவென்றால், பசலை கீரையை பொடிப்பொடியாக அறிந்து, வேக வைத்து சாதத்துடன் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.

தேங்காய்ப்பால்

தேங்காய் பாலில், தாய்ப்பாலை விட அதிகமான சத்துக்கள் உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவே வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணி காக்கும் வகையில், அக்குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாக செய்து கடித்து சாப்பிட கொடுக்க வேண்டும்.

கால்சியம்

வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்து என்பது மிகவும் அவசியமான ஒன்று. இது குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு சாப்ஃட் டிரிங்ஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

 

ஏனென்றால், இத பானங்கள் கால்சியம் சத்தை உடல் கிரகித்துக்கொள்ளும் திறனை குறைகிறது.

பால்

பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு பாலில் தேன் சேர்த்து, கொடுத்து வந்தால், அவர்களது உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமைய உதவுகிறது.

புதினா இலைகள்

பெற்றோர்கள் அனைவருமே குழந்தைகளின் ஆரோக்கியமான உறக்கத்தை விரும்புபவர்கள். குழந்தைகள் தூங்கும் போது, கொசுக்கள் அல்லது ஈக்களின் தொல்லை இருந்தால், அவற்றை தவிர்ப்பதற்கு, அவர்கள் தூங்கும் இடத்தை சுற்றிலும், புதினா இலையை கசக்கி போட்டால் ஈக்கள் மற்றும் கொசுக்களின் தொல்லையை தவிர்க்கலாம்.

பேரிட்சை

 

குழந்தைகளுக்கு இரவு தூங்குவதற்கு முன்பு 4 அல்லது 5 பரிட்சை பழங்களை சாப்பிட கொடுக்க வேண்டும். அவ்வாறு, கொடுத்தால் குழந்தைகளுக்கு மனோபலம் அதிகரிக்கும். மேலும், மூளை வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.

சளி தொல்லை

இன்று குழந்தைகள் பாதிக்கப்படும் மிக முக்கியமான நோய்களில் ஒன்று சளி தொல்லை. இந்த பிரச்சனை இருக்கும் போது, குழந்தைகளுக்கு காது மற்றும் வயிற்று பகுதிகள் வலிக்கக் கூடும்.

எனவே குழந்தைகளின் உடல் பாகங்களை தொடும் போது, அவர்கள் காட்டும் எதிர்ப்பை வைத்தே அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

நகம் வெட்டுதல்

 

குழந்தைகளுக்கு நகம் வெட்டுதல் என்பது மிகவும் பாதுகாப்பான முறையில் அவர்களை அணுக வேண்டும். அவர்கள் தூங்கும் போது தான் சில பெற்றோர்கள் நகம் வெட்டுகின்றனர்.

ஆனால், எப்போதும் குழந்தைகளுக்கு நகம் வெட்டும் போது, அவர்களது கைகளை சோப்பினால் கழுவி விட்டு வெட்டும் போது, எளிதாக வெட்டலாம்.

வீடு சுத்தம்

குழந்தைகள் உள்ள வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே சிறுகுழந்தைகளை அருகில் வைத்து கொண்டு, வீட்டை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு தும்மல், இருமல், சளி தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்பாடாகி கூடும்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

38 mins ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

50 mins ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

1 hour ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

1 hour ago

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

2 hours ago

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

2 hours ago